கலப்பு திருமணம்..!! சாதியை சொல்லி திட்டிய மாமியார்..!! வரதட்சணை கொடுமை..!! தூக்கில் தொங்கிய மருமகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்தவர்கள் செல்வம் – வனிதா தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகள் பிரியங்கா. காரைக்குடி அடுத்த ஆறாவயலில் செயல்பட்டு வந்த பஞ்சுமில்லில் பணியாற்றி வந்த நிலையில், அங்கு தன்னுடன் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவரை காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாயிடம் பேசிய பிரியங்கா, தன்னை மாமியார் சாதியை சொல்லி திட்டியதாகவும், வரதட்சணையாக நகை பணம் ஏதுவும் கொண்டு வரவில்லை என்றும் அவமானப்படுத்தி வருவதாகவும், அதற்கு தனது கணவரும் உடந்தையாக இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார்.

அதன் பின்னர் மகளை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், காதலர் தினத்தன்று மாலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியங்காவின் சடலத்தை மீட்ட காளையார்கோவில் போலீசார், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காதல் திருமணம் செய்து காதலனை நம்பி வாழச்சென்ற தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி இருப்பதால், இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதுவரை தனது மகளின் உடலை வாங்க மறுப்பதாகவும் தாய் வனிதா, சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வெடி விபத்தில் 3 பேர் பலி.. தென்காசியில் கிணறு தோண்டும் போது நடந்த சோகம்..

Thu Feb 16 , 2023
தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. தென்காசி அருகே ஆலங்களம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் இன்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.. இதில் ஆணையபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அப்போது கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததன் காரணமாக, 2 பேர் உயிரிழந்தனர்.. அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த […]

You May Like