சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..? இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை..! கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா..? கனவு கண்டு '342 கோடி' வென்ற அதிஷ்டம்..! "20 வருடமா இதை தான் செய்கிறேன்" பெண் பெருமிதம்..! மக்களே.. IFSC மற்றும் MICR குறியீடுகளை மாற்றவுள்ள பிரபல வங்கி..! மார்ச் மாதத்திற்கு பின் பழைய குறியீடு இயங்காது..! எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன்..! சாலமன் பாப்பையா, பாடகி சித்ரா உள்ளிடோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்.. பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து தீயாய் பரவும் செய்தி..! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..!

இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள்..? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு அப்பாவிகளின்

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில் இதுதொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக, தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

அதாவது, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு நேரத்தில் கடைகளை அடைக்காமல், கூட்டம் கூடி கடையின் முன்பு பேசிக்கொண்டு இருந்ததாகவும், போலீசார் கடைகளை அடைக்க கூறியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து தரையில் விழுந்து புரண்டதாலேயே காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சம்பவத்தன்று கடையின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த ஜெயராஜை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். காவலர்களோடு ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், அமைதியாக செல்கிறார்.

மேலும் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸை காவலர்கள் ஒரே நேரத்தில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சிசிடிவி காட்சியிலோ, ஃபென்னிக்ஸ் அவரது நண்பருடன் தனியாக இரு சக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு செல்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் உண்மைக்கு மாறான தகவல்களை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

jeyaraj

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?

இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் முதல்வரே..? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

Mon Jun 29 , 2020
தமிழகம் முழுவதும் கொரானா பரவலை தடுக்கும் நோக்கில், ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் வரை உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு […]
அன்லாக் 4.0

You May Like