2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது?

"எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறும் முதலமைச்சர்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா..?” ஸ்டாலின் கேள்வி

எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் திரு. நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு- சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் ‘டம்மி’ பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அமைச்சர் திரு. வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள் – ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல; வாடிக்கையாக நடைபெற்று வருவதுதான்.

நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. வேலுமணி. “நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது” என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி – புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன்?

சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய புகழேந்தி 30.6.2016 அன்றே ஓய்வு பெற்றவர். ஒருமுறை அல்ல, இருமுறை தலா ‘இரு வருடங்கள்’ அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சியிலிருந்து ‘நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்’ தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புகழேந்தி. முதலில் புகழேந்திக்குப் பணி நீட்டிப்புக் கோரும் போது ‘5000 கோடி ரூபாய்க்கு’ மேற்பட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதி- அந்த பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார்.

மூன்றரை வருடங்களுக்கு மேல் அப்பணிகளை அமைச்சர் விரும்பியவாறு, அவருக்கு நிறைவளித்திடும் வகையில், ‘நேர்த்தியாகச்(!)’ செய்து விட்டு, இப்போது ’12 ஆயிரம் கோடி ரூபாய்த்’ திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த ‘டிரான்ஸ்பர்’ ஊழல் கொடிகட்டிப் பறக்க, தனக்குத் தானே ‘பாதுகாப்புக் கவசம்’ அமைத்துக் கொள்ளும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் உள் நோக்கச் செயல்பாடே காரணம் எனத் தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம்; அதன்பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித் துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு திரு. வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்!

இதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும் / நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின்கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் திரும்பத் திரும்ப ‘பணி நீட்டிப்பு’ வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?

தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி- அங்கு ‘தர நிர்ணய தலைமைப் பொறியாளர்’ பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன? 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா?அனைத்துமே புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டியவை!

“எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் திரு. பழனிசாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.

ஒருவேளை முதலமைச்சர் திரு. பழனிசாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால்- இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சாலை விபத்தில் முதியவர் பலி: கிரிக்கெட் வீரர் கைது

Sun Jul 5 , 2020
இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிசின் கார் மோதியதில், சைக்கிள் ஓட்டிச் சென்ற 64 வயது முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த நபர் இன்று மரணம் அடைந்தார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் குசால் மெண்டிஸ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
88888

You May Like