குட் நியூஸ்…! சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்…! டிசம்பர் 2024 வரை நீட்டிப்பு…!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2023 ஜூன் 1 ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் உதவியுடன், சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் (எல்.ஓ.ஆர்) பெற விண்ணப்பிக்கலாம். சாலையோர வியாபாரிகள் தங்களது ஸ்வநிதி கடன் விண்ணப்ப நிலையையும் இதில் சரிபார்க்கலாம்.

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களுக்காக பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஜூலை 20, 2023 நிலவரப்படி, 38.53 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.6,492.02 கோடி மதிப்பிலான 50.63 லட்சம் கடன்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் பயன்கள் நகர்ப்புறங்களில் வணிகம் செய்யும் அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மணிப்பூர் 2 பெண்கள் விவகாரம்!… யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா?… உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Tue Aug 1 , 2023
மணிப்பூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் விவகாரத்தை குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மே 4ஆம் தேதி நடந்த […]

You May Like