வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஊரடங்கின்போது மக்கள் வெளியில் செல்வதை தடுக்க நடமாடும் மளிகை கடைகள்… சென்னை மாநகராட்சி ஏற்பாடு…

கொரோனா வைரஸால் ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் வருவதை தடுக்கும் விதமாக 15 நாட்களுக்கு தேவைப்படும் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய காம்போ பேக் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

chennai maligaithings

கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏராளமானோர் வெளியில் வந்த வண்ணம் உள்ளனர். வெளியில் வராமல் இருக்க வாகனங்களை பறிமுதல் செய்வது, தண்டனை கொடுப்பது, என பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஒருசில இடங்களில் கட்டுபடுத்த முடியாமல் உள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர், பி.டி. ராஜன் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நேற்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, 80 நடமாடும் கடைகள் கோடம்பாக்கம் மண்டலத்திலும், 450 நடமாடும் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மற்ற மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடமாடும் கடைகள் மேலும் அதிகரிக்கப்படும் என கூறினார்.

மேலும், இந்த நடமாடும் மளிகை கடையில் 4 நபர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய ‘காம்போ பேக்’ ரூ.850-க்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பிரதிநிதிகள், மேற்பார்வை பொறியாளர், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1newsnationuser2

Next Post

காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய பால் பாக்கெட்காரன்... மடக்கிபிடித்த காவல்துறை...

Fri Apr 10 , 2020
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய பால் பாக்கெட்காரனை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும் அவருடைய மனைவியும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறை ஒன்றில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், குடியிருப்பின் […]
chennai raped women the boy escaped

You May Like