இந்திய சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மோடி நல்ல மூடில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்திய சீனா எல்லை பகுதியில் பரபப்பு சூழல் நிலவுகிறது. அங்கு போர் மூள வாய்ப்பிருப்பதால் இரண்டு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளும் உதவி கோரினால் மத்தியஸ்தராக இருந்து சமாதனம் செய்து வைப்பதாக கூறினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம், ” நான் இந்திய பிரதமரை மிகவும் நேசிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை காரணமாக பெரிய மோதல் ஏற்ப்படவுள்ளது. பெரிய அளவில் மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளுக்கும் எல்லை விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கின்றனர். இது தொடர்பாக நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் போனில் பேசினேன். ஆனால் மோடி இந்த விவகாரத்தில் நல்ல மூடில் இல்லை. இப்போதும் இரு நாடுகளும் அமெரிக்காவிடம் உதவி கேட்டால் மத்தியஸ்தராக இருந்து சமாதனம் செய்து வைக்க தயாராக உள்ளேன்” என கூறினார்.

பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு துறை அமைச்சர், ” இந்தியா சீனா தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க ஏற்ற தகவல் தொடர்ப்பு சாதனங்களை கொண்டுள்ளது.” என பதிலடி கொடுத்துள்ளார்.