மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது… தோற்கடிக்கப்பட வேண்டும்…! சுப்பிரமணியசாமி பரபரப்பு கருத்து…!

பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என மதுரையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.‌

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்பி சுப்பிரமணியசாமி; பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நிச்சயம் வெற்றி பெறுவார்.

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்; 272 இடங்கள் வெற்றி பெற்றாலே போதும். இந்தியாவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பாஜக அரசியல் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விளம்பரத்தில் மட்டுமே எல்லாம் செய்து விட்டதாக பாஜக சொல்கிறது என்றார்.

Vignesh

Next Post

Election 2024 | "பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது தியாகமல்ல; வியூகம்"… கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி.!

Sun Mar 24 , 2024
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்கான வழிகாட்டுதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் […]

You May Like