மீண்டும் தீயாய் பரவும் குரங்கு அம்மை..!! சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் மூன்றாவது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குரங்கம்மைமீண்டும் தீயாய் பரவும் குரங்கு அம்மை..!! சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!யால் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய்கள்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இதனைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், ”உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது” என்றார். இதற்கிடையே, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகள் ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காவி உடையில் மகளுடன் சேர்ந்து பெண் போலீஸ் செய்த செயல்.! சிக்கலில் சிக்கிய வீடியோ.!

Wed Nov 2 , 2022
சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலானால் அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு தற்போது சோசியல் மீடியா தீயாக இருக்கிறது. இந்த சூழலில், ஒரு பெண் காவல் ஆய்வாளர் காவிச் சீருடையில் தனது மகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு இருப்பது வெறும் சர்ச்சையாகி இருக்கிறது. சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக விஜயலட்சுமி பணியாற்றி வருகின்றார். இவருக்கு சாரா என்ற மகள் இருக்கின்றார். மகள் […]

You May Like