‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

தனது உடல் இச்சைக்காக திருமணமான மகளை கொன்று வீட்டில் புதைத்த தாய்..6 ஆண்டுகள் கழித்த தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடு

திருப்பூரில், தனது தவறான தொடர்பால் பெற்ற தாயே காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று வீட்டிற்குள் புதைத்த விவகாரம் 6 ஆண்டுகளுக்குப் பின் அம்பலமாகி உள்ளது.

estar baby
கொலை செய்யப்பட்ட எஸ்தர் பேபி

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தாய் சகாயராணி கணவர் அப்துல்காசரைப் பிரிந்து பாக்கியராஜ் என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

தாய்வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் எஸ்தர்பேபி மாயமானதாக , தாய் சகாயராணி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறையினர் மாயமான வழக்கு என 6 வருடங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.

இந்நிலையில், சகாய ராணியின் தம்பி சேவியர் அருண் என்பவன் கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசாரால் கொலை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளான். இதையறிந்து அங்கு வந்த எஸ்தர் பேபியின் தந்தை, திருப்பூரில் தனது வீட்டிற்கு அருண் வந்து சென்ற பின்னர் தான், தன் மகள் காணாமல் போனதாகவும், அதனால் அவர் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

uncle sevior arun
சகாய ராணியின் தம்பி சேவியர் அருண்

இதனையடுத்து சேவியர் அருணை பள்ளிக்கரணை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது மாயமான எஸ்தர் பேபியை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் பேபியை, தனது குடும்பத்தை கவனித்துவந்த பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு தாய் சகாயராணி வற்புறுத்தியுள்ளார். அதற்கு உடன்பட மறுத்து எஸ்தர்பேபி சண்டையிட்டு வந்ததால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அக்கம் பக்கத்தில் மகள் எஸ்தர்பேபி விமர்சித்ததால், மகள் என்றும் பாராமல் அவரை தீர்த்துக் கட்ட சகாயராணி சதி திட்டம் தீட்டியுள்ளார்.

mother sagayarani
கைது செய்யப்பட்ட சகாய ராணி

அதன்படி, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டிற்கு வந்த தனது சகோதரர் சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்து குடியிருந்த வீட்டிற்குள்ளேயே புதைத்ததை சகாயராணி ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான்கு நாட்கள் கழித்து, தனது மகளை காணவில்லை என போலீசில் சகாயராணி புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து எஸ்தர் பேபி கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து வீரபாண்டி பகுதியில் எஸ்தர்பேபி சடலம் புதைக்கப்பட்ட அந்த வீட்டில் காவல்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. சடலம் புதைக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆனதால் எலும்புக் கூடுகளாக இருந்தது. அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவ குழுவினர் எடுத்துச் சென்றனர். தவறான தொடர்பால் பெற்ற தாயே அடைக்கலம் தேடி வந்த மகளை இரக்கமின்றி கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த சம்பவம் ஆறு வருடங்களுக்குப் பிறகு அம்பலமாகி உள்ளது

1newsnationuser4

Next Post

தேர்தலில் வெற்றி பெற வீடுவீடாக செல்வது போல் மருந்துகளை வழங்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

Thu Jun 25 , 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஹோமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய ‘ப்ரோபைலக்டிக்’ மருந்தை தமிழக அரசு வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக தொற்று உள்ள நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற நகரங்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது […]
உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கேப்டன் விஜயகாந்த்..!

You May Like