58 வயது பெண்ணை கடத்தி  கொலை! பலாத்காரம் செய்த  16 வயது சிறுவன் கைது!

மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவன் 58 வயது பெண்மணியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் கைலாச்புரி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத  ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாண நிலையில் கடந்த சடலத்தில் ஏராளமான காயங்களும் இருந்தன. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையை தொடங்கிய காவல்துறைக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்காமல்  மிகவும் சவாலாகவே சென்று இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் இறந்த தினத்தன்று அந்த ஊரில் ஒரு சிறுவனும் காணாமல் போயிருந்த நிகழ்வு காவல் துறைக்கு தெரிந்திருக்கிறது. அதை வைத்து விசாரணை மேற்கொண்டதில்  காணாமல் போன சிறுவன் இறந்த பெண்மணியின் வீட்டருகே வசித்து வந்ததும் விசாரணையில் தெரிந்திருக்கிறது. ஆனால் காவல்துறைக்கு முதலில் அந்த சிறுவனின் மீது சந்தேகம் எழவில்லை.

பின்னர் இறந்த பெண்மணியின் வீட்டில் இந்தச் சிறுவனை பற்றி விசாரித்த போது  இந்தச் சிறுவன் அடிக்கடி தொலைக்காட்சி பார்க்க தங்கள் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஒருமுறை அந்தப் பெண்மணியின் செல்போன் செல்போன் காணாமல் போன போது இந்தச் சிறுவன் தான் அதை  எடுத்திருக்கிறான் என குற்றம் சாட்டி அவனை அடித்து துன்புறுத்து இருக்கின்றனர்.

 இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட காவல் துறையினர்  சிறுவனை தேடி கண்டுபிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள்  காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன.  திருட்டு பட்டம் சுமத்தப்பட்ட அந்த சிறுவன்  அந்தப் பெண்மணியை பழி வாங்குவதற்காக அவரது கணவரும் மகனும் வீட்டில் இல்லாத நேரம் பெண்மணியை கடத்த முயன்றிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்  தப்பிக்க நினைக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு  அப்பெண்ணின் பிறப்புறுப்பு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி இருக்கிறான். இதில் மயக்கமடைந்த அந்தப் பெண்ணை  கட்டிட வேலை  நடைபெறும் இடத்திற்கு  இழுத்துச் சென்று அவர் இறந்ததும்  பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். பின்னர் அவரது நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான் சிறுவன். தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Baskar

Next Post

கூட்டு பாலியல் வன்கொடுமை! நாடகமாடிய இளம் பெண் -  காவல்துறை அதிர்ச்சி!

Sun Feb 5 , 2023
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்து  நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் அவர் சென்னை செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை […]

You May Like