சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

“தர்மம் இருந்தால் என்னுடன் போருக்கு வா.. இனி விஷாலுக்கு தூக்கமே கிடையாது..” பகிரங்கமாக சவால் விடுத்த மிஷ்கின்..

துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக, மிஷ்கின் – விஷால் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மிஷ்கின் பகிரங்கமாக விஷாலுக்கு சவால் விடுத்துள்ளார்.


மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து அவர் விலகியதை அடுத்து, அப்படத்தை தற்போது விஷாலே இயக்கி நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மிஷ்கின் குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையும் சமூக வலைதளங்களில் வைரலானது. மிஷ்கின் அதிக தொகையை செலவழித்துவிட்டதாகவும், அவரை போன்ற இயக்குனர்களிடம், வேறு எந்த தயாரிப்பாளரும் இரையாகிவிட வேண்டாம் என்றும் விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தின் புதிய வெப்சீரிஸ் படைப்பான கண்ணாமூச்சி பிரஸ்மீட் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் விஷாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்ததுடன், அவரை ஒருமையில் திட்டி பேசியது சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அப்போது பேசிய மிஷ்கின், விஷால் தனது அறிக்கையில் தெரிவித்த துப்பறிவாளன் செலவு கணக்குகளை மறுத்ததுடன், தான் செலவு செய்த உண்மையான தொகை குறித்தும் விளக்கினார். மேலும், ஒவ்வொரு இடத்திலும் தான் அவமதிக்கப்பட்டதாகவும், தனது தாயை வேசி என்று விஷால் திட்டியதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும் விஷால் பேசியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் மிஷ்கின் கூறினார். விஷாலுக்கு நல்ல கதை எழுதிக் கொடுத்தது மட்டுமே தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறிய மிஷ்கின், தான் யார் என்பதை நிரூபிக்க தான் எடுத்த படங்களே போதும் என்றும் தெரிவித்தார்.

மேலும் துப்பறிவாளன் கதைக்கு NOC எனப்படும், எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற சான்றிதழுக்காக 10 நாட்கள் தன் அலுவலகத்திற்கு வந்து விஷால் தரப்பினர் தொடர்ந்து தொல்லை கொடுத்தததாகவும் கூறினார். தன் கதையை விஷால் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மிஷ்கின் சான்றிதழ் கொடுத்த பிறகு தான், துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

ஒருகட்டத்தில் ஆவேசமான மிஷ்கின், விஷாலை பொறுக்கி என்று தொடர்ந்து கூறி வசைபாட ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் தான் மட்டும் தான் விஷாலை பத்திரமாக பார்த்துக் கொண்டதாகவும், இனி விஷாலிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் மிஷ்கின் தெரிவித்தார். விஷாலிடம் தர்மம் இருந்தால், தன்னுடனான குருக்ஷேத்ர போரில் வந்து போரிட வேண்டும் என்றும் விஷாலுக்கு அழைப்பு விடுத்தார். இதுதான் தொடக்கம் என்று எச்சரித்த மிஷ்கின், விஷாலுக்கு இனி தூக்கமே கிடையாது என்றும் பகிரங்கமாகவே பேசினார்.

1newsnationuser1

Next Post

கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒரு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

Sat Mar 14 , 2020
கொரோனா வைரஸினால் டெல்லியில் 68 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால் போன்ற அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த 68 வயது மூதாட்டி கொரோனா அறிகுறியோடு ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் […]
640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

You May Like