கல்குவாரியில் மர்ம கொலைகள்..!! 10 ஆண்டுகளாக தொடரும் திகில் சம்பவம்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் கல்குவாரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், யாரோ கல்லைக் கட்டி அந்த இளைஞரை தூக்கி வீசியதாக தெரிகிறது. சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கும் மேலாகியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என்று எழுதப்பட்டிருந்தது.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த இளைஞரை கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட அதே கல்குவாரியில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

வேங்கைவயல் சம்பவம்..!! ஆயுதப்படை காவலர்களுக்கு தொடர்பா..? சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி..!!

Fri Feb 10 , 2023
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை போலீசாரிடம் சிபிசிஐடி நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை, போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் […]

You May Like