தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!

உலகில் வேறு எங்குமே பேசப்படாத மொழி.. இந்தியாவின் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் தான் பேசப்படுகிறது..!!

நம் நாட்டில் பல ரகசியங்கள் உள்ளன, அவை பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இந்தியாவில் பல இடங்களைப் பற்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சர்யமடைகின்றனர். இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இந்தியா

இந்த கிராமத்தின் பெயர் மலானா. இமயமலையின் சிகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள மலனா கிராமம் ஆழமான அகழிகள் மற்றும் பனிக்கட்டி மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 1700 பேர் வசிக்கும் இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சுற்றி பார்ப்பதற்காக இங்கே வருகிறார்கள். இருப்பினும், மலானாவை அடைவது மிகவும் கடினம்.

இந்த கிராமத்திற்கு சாலை இல்லை. மலைப்பாதைகள் வழியாக மட்டுமே அங்கு செல்ல முடியும். பார்வதி பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸாரி கிராமத்திலிருந்து நேரடியாக ஏறலாம். ஸாரியில் இருந்து மலானாவை அடைய சுமார் 4 மணி நேரம் ஆகும்.

இந்த கிராமத்துடன் தொடர்புடைய பல வரலாற்றுக் கதைகள், மர்மங்கள் மற்றும் தீர்க்கப்படாத பல கேள்விகள் உள்ளன, அவற்றில் ஒன்று, இங்குள்ள மக்கள் தங்களை கிரேக்கத்தின் புகழ்பெற்ற மன்னரான மாமன்னர் அலெக்சாண்டரின் சந்ததியினர் என்று கூறிக் கொள்கிறார்கள். அலெக்சாண்டர் இந்துஸ்தானைத் தாக்கியபோது, ​​அவரது வீரர்கள் சிலர் மலானா கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர், பின்னர் அவர்கள் அங்கேயே இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

1452343011 2878101853 8a0eff68bf

இங்குள்ள மக்கள் அலெக்ஸாண்டர் படையை சேர்ந்த வீரர்களின் சந்ததியினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இருப்பினும், இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அலெக்ஸாண்டரின் காலத்தில் இருந்த பல விஷயங்கள் மலானா கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸாண்டரின் காலத்திலிருந்து ஒரு வாள் இந்த கிராமத்தின் கோவிலிலும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள மக்கள் கனாஷி என்ற மொழியைப் பேசுகிறார்கள், இது மிகவும் மர்மமானது. அவர்கள் அதை ஒரு புனித மொழியாக கருதுகிறார்கள். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த மொழி மலானாவைத் தவிர உலகில் வேறு எங்கும் பேசப்படுவதில்லை. மேலும் இந்த மொழி மக்கள் வேறு யாருக்கும் புரியாது. இந்த மொழி வெளியாட்களுக்கு கற்பிக்கப்படவில்லை. பல நாடுகளில் இந்த மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலானாவின் பெரியவர்களும் வெளி நபர்களுடன் கைகுலுக்குவதையும், அவர்களைத் தொடுவதையும் தவிர்க்கிறார்கள். நீங்கள் இங்குள்ள கடையிலிருந்து சில பொருட்களை வாங்கினால், கடைக்காரர் அதை உங்கள் கையில் கொடுப்பதற்கு பதிலாக அதை மேசையில் தான் வைப்பார். மேலும் உங்கள் கையில் இருந்து பணத்தை வாங்கமாட்டார், அதற்கு பதில் பணத்தை மேசையில் வைக்கச் சொல்வார்.

இருப்பினும், இங்குள்ள இளம் தலைமுறை இந்த விஷயங்களை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்களிடம் கைகுலுக்கவோ, அணைத்துக்கொள்வதையோ தவர்ப்பதும் இல்லை.

இந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்குள் மட்டுமே திருமணங்களை செய்கின்றனர். கிராமத்திற்கு வெளியே யாராவது திருமணம் செய்து கொண்டால், அவர் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இருப்பினும், அத்தகைய நிகழ்வுகள் அரிதாகவே நடக்கிறது.

compressed wb1k

இங்கு சரஸ் என்ற பொருள் மிகவும் பிரபலமானது. கஞ்சா செடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகையான போதைப்பொருள் பொருள் சரஸ். அதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், மலானா மக்கள் அதை கைகளால் தேய்த்து தயார் செய்து பின்னர் வெளியாட்களுக்கு விற்கிறார்கள். இருப்பினும், இது கிராமத்தின் குழந்தைகளையும் பாதித்துள்ளது.

இங்குள்ள குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே போதைப்பொருள் விற்பனை செய்யும் தொழிலுக்குச் செல்கிறார்கள். இங்குள்ள அனைத்து விருந்தினர் மாளிகைகளும் இரவில் மூடப்பட்டிருப்பதால், பகலில் மட்டுமே வெளி நபர்கள் மலானாவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

1newsnationuser1

Next Post

மும்பை அருகே கட்டட விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு.. 8 பேர் பலி..

Mon Sep 21 , 2020
மும்பை அருகே இன்று அதிகாலை நடந்த கட்டட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பிவாண்டியில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. “பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறப்புகளின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று […]
மும்பை

You May Like