ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

நாக சதுர்த்தியான இன்று – மறக்காமல் இதை செய்யுங்கள்…!

கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

nag panchami puja

இந்நாளில் நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.

சென்னை: ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன என்பது கூறப்பட்டது. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் வணங்குவதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கும். திருமண தடை, புத்திரபாக்கிய தடைகள் நீங்கும்.

unnamed 5

பொதுவாகவே ஒருவருக்கு திருமணத்தடையோ இல்லை குழந்தை பெறுவதில் தாமதமோ வீட்டில் ஏதேனும் சுப காரியங்கள் நடக்கையில் அபசகுனமோ ஏற்பட்டாலோ நம்ம உடனடியாக தோஷம் இருக்கிறதா என ஜாதகம் பார்க்க செல்வோம். ஒரு வேலை நாக தோஷம் இருந்தாலும் இவ்வாறு தடைகள் ஏற்படலாம்

நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.

சர்ப்ப தோஷம்: ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவராகவும் சித்தரிக்கிறார்கள். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்பதோஷமோ, நாக தோஷமோ இருந்தால் எந்த சுப காரியமும் நடைபெறாது.

naga dosha

ஏழு ஜென்மங்களுக்கு தொடர்ந்து வரும் தோஷம்: நம் ஜாதகத்தில் அமைந்துள்ள தோஷங்களை விட நாக தோஷம் ஏழேழு ஜென்மங்களுக்கு பின் தொடரும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

விரதம் இருந்து வழிபடவேண்டும்: பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும்.

குழந்தை பிரச்சனைகள்: நாக தோஷம் ஒருவருக்கு இருந்தால் குழந்தை பெறுவதில் தடை மற்றும் குழந்தை பிறந்தால் அது ஊனமாக பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பெற்றோர் பொதுமன்றி பிள்ளைகளும் அவதிப்படுவர். இதற்கு ஒரே வழி மனம் உருகி நாக தேவதைகளை வழிபடுவதே.

தோஷங்கள் நீங்கும்: ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர நன்மைகள் நடைபெறும். தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

விநாயகர் தரிசனம்: கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம். கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடனை தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.

நாகராஜா காயத்ரி: நாக சதுர்த்தி தினமான இன்று நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும்.

“ஓம் சர்பராஜாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்”

Nagaraja Gayatri Mantra

பொது பொருள்: சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறான். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நாகராஜனின் அருளால் தோஷங்கள் விலகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை செல்வம் இல்லாமல் தவிப்போர் இந்த மந்திரத்தை ஜபித்து பயன் பெறலாம்.

1newsnationuser6

Next Post

தாலிக்கட்டும் வீடியோ..! மூன்று நாட்கள் காத்திருங்கள்..! - சோனியா அகர்வால் போட்ட ட்விட்

Fri Jul 24 , 2020
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை சோனியா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தாலிக்கட்டும் வீடியோவை வெளியிடவே அவருக்கு பலர் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் அப்போதே காதல் தீ பற்றவே அதை சில நாட்களுக்கு வெளிக்காட்டாமல் சோனியா அகர்வால் […]

You May Like