அத்துமீறி நடந்த திமுக துணை சேர்மன்.. செருப்பால் அடிக்கச்சென்ற பெண் கவுன்சிலர்.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமானது சேர்மன் நளினியின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக துணை சேர்மன் கார்த்திகேயன், சுயேச்சை கவுன்சிலர் சினேகா, பொறியாளர் சண்முகம், கமிஷனர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சுயேச்சை கவுன்சிலர் சினேகா துணை சேர்மன் கார்த்திகேயனை செருப்பால் அடிக்க முயற்சித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி துணிக்கடையில் வாழ்த்து தெரிவிக்கும் போது சினேகாவின் கணவரை கார்த்திகேயன் ஆதரவாளர்கள் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர்.

சேர்மன் தேர்தலில் கார்த்திகேயனுக்கு ஆதரவாக வாக்களிக்காத காரணத்தால் அவரது தூண்டுதலினால் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சுயேச்சை கவுன்சிலர் சினேகா குற்றம் சாட்டினார். இதன் காரணமாக, நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கார்த்திகேயன் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த சினேகா தன் காலிலிருந்து செருப்பை கழற்றி காட்டி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதை மற்ற கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சேர்மன் நளினி கூட்டத்தை அமைதி படுத்த முயற்சித்தார். ஆனால் யாரும் அமைதியாக வில்லை என்ற காரணத்தால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்து அங்கிருந்து கிளம்பி சென்றார். பின் போலீசார் வந்து இரு தரப்பையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Baskar

Next Post

மது அருந்துபவர்களை குறிவைக்கும் கல்லீரல் நோய்கள்.! உஷார்.. எப்படி சமாளிப்பது.?!

Tue Nov 1 , 2022
மது அருந்துபவர்கள் பலர் தங்களது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் உண்டாகிறது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்பட்டு கல்லீரலை சேதப்படுத்திவிடும். மேலும் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து, விரைவில் செயலிழக்க வைத்துவிடும். கல்லீரலை பாதுகாக்க […]
கல்லீரல்

You May Like