புதிய வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ள நாசா, அதனை தயாரிப்பதற்கான லைசென்சை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், ‘கொரானா’ வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ புதிய, வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ளது.
இந்த வென்டிலேட்டரை தயாரிப்பதற்கான லைசென்ஸ், இந்தியாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்கள் உட்பட, 21 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆல்பா டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட், பாரத் போர்ஜ் லிமிடெட், மேதா சர்வே டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், இந்த லைசென்ஸை பெற்றுள்ளன.