fbpx

9️ வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள்…!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவு நாட்டில் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது சமூக விரோதிகள் ரவுடிகள் என்ற அளவில் இருக்கும் நபர்களாக தான் இருக்கும். ஆனால் தற்சமயம் சிறுவர்கள் கூட இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட சிறுவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்க்கும் போது எதிர்கால இந்தியா என்னவாகும்? என்ற கவலை வெகுவாக எழுகிறது.

உத்திர பிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி சென்ற சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அண்டை வீட்டு சிறுவர்கள் 2 பேர் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவர்களை எதிர்த்து போராடி அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அந்த சிறுமியை அந்த இரு சிறுவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக பதிவு செய்து, இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து விடுவோம் என்று அந்த சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காவல்துறையிடம் புகார் வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதற்கு நடுவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 2 சிறுவர்களும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

அவர்களை தேடும் பணியில் காவல்துறை மிக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மதுரா காவல் நிலைய ஆய்வாளர் சோடே லால் தெரிவித்திருக்கிறார்.

Next Post

இரவு நேரங்களில் உறை பனி..!! வெளியவே வர முடியாதாம்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

Tue Jan 17 , 2023
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் […]
இரவு நேரங்களில் உறை பனி..!! வெளியவே வர முடியாதாம்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like