ஹரியானாவில் பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் கடந்த சனிக்கிழமை அன்று ஜிம்மில் இருந்து காருக்கு திரும்பிய பெண்ணை 4 பேர் கடத்த முயன்றுள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் கடத்தல்காரர்கள் 4 பேரும் தெறித்து ஓடுகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் யமுனா நகர் டிஎஸ்பி கமல்தீ சிங் கூறியுள்ளார்.
அந்த சிசிடிவி காட்சியில், பெண்ணை கடத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை கடத்தல்காரர்கள் தேடுகின்றனர். ஆனால், குற்றம் நடந்த இடத்தை விட்டு அவர்கள் தலைதெறிக்க ஓடியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. பட்டப்பகலில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளதால், பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.