திருடன் ஒருவன் தனது திருட்டு வேலைகளையெல்லாம் முடித்த சந்தோஷத்தில் உற்சாகமாக நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடை ஒன்றில் தனக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை திருடிய பிறகு வாயில் குட்காவை போட்டுக் கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறான் அந்த திருடன். கடையின் உரிமையாளர் மறுநாள் வந்து பார்த்தபோது தான் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆராய்ந்த போதுதான் அந்த திருடன் பல சேட்டைகள் செய்திருப்பது தெரியவந்தது.
அந்த வீடியோவில், பணங்களை திருடியதும் ஹாயாக ஆட்டம் போட்டு குட்காவை மென்ற அந்த திருடன் சிசிடிவியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறான். திருடனின் இந்த வீடியோ swatic12 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதோடு, “சின்ன சின்ன வெற்றியை கொண்டாடுங்கள்” என கேப்ஷனும் இடம்பெற்றிருக்கிறது. அந்த திருடனின் ஆட்டத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் “வெற்றிக்கான vibe இதுதான்” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருடனின் குத்தாட்ட வீடியோவை காண: https://www.instagram.com/reel/CnHluGBL1HE/?utm_source=ig_web_copy_link