சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 100 ரூபாய் பணத்தையும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் அந்த சிறுமியின் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக்கொடூரனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அவரது நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த கொடூர ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, பெற்றோர்களுக்கு தெரிந்தவர்களாலும், உறவினர்களாலும் மட்டுமே அதிகம் நிகழ்கின்றது. எனவே, பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மிக கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.