தனது முன்னாள் மனைவி மற்றொரு நபரை மறுமணம் செய்ததால், முன்னாள் கணவர் அப்பெண் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கல்னா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் அவரது தலை மற்றும் வாயின் வலது பக்கத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
குற்றவாளி கோவிந்த பிஸ்வாஸ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் போது அந்தப் பெண் தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை மாலை ராக்கிப் பெட்டியைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது பிஸ்வாஸ் வந்து அவள் மீது ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் வலியால் அலற ஆரம்பித்ததையடுத்து அக்கம்பக்கத்தினருக்கு இந்த சம்பவம் தெரிய்வந்துள்ளது..
தனது முன்னாள் மனைவி தன்னை விவாகரத்து செய்த பிறகு, தருண் நாத் என்பவரை திருமணம் செய்ததால் கணவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. மணந்தபோது அந்த நபர் மகிழ்ச்சியடையவில்லை. எனினும் பிஸ்வாஸ் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததாகவும், அதனால் அவரை விவாகரத்து செய்ததாகவும்.. அதன்பின்னர் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தருண் நாத் கூறினார்.