மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்கள் – வீட்டில் தயாரிப்பது எப்படி?

கொரோனா வந்த பிறகு குணப்படுத்துவதை காட்டிலும், வரும் முன்னதாகவே அதை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே சிறந்தது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுதொடர்பாக பேசியுள்ள
சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான மருத்துவர் வை.தீபா,
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் உடலில் இயல்பாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இயற்கை மருத்துவ முறைப்படி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள், துளசி, அதிமதுரம் கலந்த பானங்களைத் தயாரித்துப் பருகுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

வைட்டமின் சி நிறைந்துள்ள பெரிய நெல்லிக்காய் 50 மில்லி,
துளசி இலைச் சாறு – 20 இலை அல்லது 20 மில்லி,
இஞ்சிச் சாறு – 50 மில்லி,
எலுமிச்சைச் சாறு – 5 மில்லி,
தண்ணீர் – 150 மில்லி,
மஞ்சள்- கால் டீஸ்பூன்
இதைக் கலந்து காலையில் 200 – 250 மில்லி அளவு பெரியவர்களும் 100- 150 மில்லி சிறியவர்களும் குடிக்கலாம். தினசரி காலை, மாலை இரு வேளைகள் இதைத் தாராளமாக எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என தெரிவித்துள்ளார்.

இதனுடன் சூடான பானகம் ஒன்றையும் தயாரித்துக் குடிக்கலாம்.

அதிமதுரம் – 5 கிராம் அல்லது கால் டீஸ்பூன்
மஞ்சள்- கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சிச் சாறு – 50 மில்லி
துளசி இலைகள் – 10
ஆகியவற்றைச் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் 2- 3 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

அதிமதுரத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுகின்றன. உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் தொற்று ஏற்படாமல் இருக்க இஞ்சியில் உள்ள நுண்பொருட்கள் உதவுகின்றன. மாலை வேளையில் இந்தப் பானகத்தை 100- 150 மில்லி தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பானகம் உயிரிழப்பு அதிகம் ஏற்படக் கூடிய உயர் ரத்த அழுத்த, நீரிழிவு நோயாளிகளின் ரத்த அழுத்த அளவையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

பொதுவாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சேர்த்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என மருத்துவர் தீபா வலியுறுத்தி உள்ளார்.

1newsnationuser4

Next Post

பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

Mon Jun 29 , 2020
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா வங்கியைத்தொடங்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 ஆயிரத்து 607 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த […]
பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

You May Like