ஷேர் ஆட்டோவிற்காக காத்திருந்த +2 மாணவி! பிளேடால் கழுத்தறுத்த 3 மர்ம நபர்!

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் வயது 56. இவருக்கு 17 வயதில் கவிதா என்ற மகள் இருக்கிறார். அவர் கடப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேர் ஆட்டோவிற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்  மாணவி கவிதா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த பிளேடால்  அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார் மாணவி. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடிக்க துரத்திச் சென்றனர்.

அந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து  அப்பகுதிக்கு வந்த சூனாம்பேடு காவல்துறையினர் இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை  காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும் அப்போதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும்  ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பட்டப் பகலில் பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

டெல்லியில் பயங்கரம்: 7 வயது சிறுமிக்கு உடலெங்கும் 18 தழும்புகள்! நாக்கை கீறி கொடுமை படுத்திய வளர்ப்புத் தாய்!

Sat Feb 18 , 2023
இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர்  கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்களை கண்டு அதிர்ச்சி […]

You May Like