மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்த கொள்ளையன் திருப்பூர் அருகே பரபரப்பு !

திருப்பூர் அருகே பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறில் மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்து எறிந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் அருண் வயது 35 இவர் திருப்பூரில் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்திருக்கிறார் அருண். அப்போது பக்கத்தில் இருந்த சக பயணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனைக் கண்டித்த பேருந்து நடத்துனர் இருவரையும் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் என்ற இடத்தில் பேருந்திலிருந்து இறக்கி விட்டிருக்கிறார். கீழே இறங்கியும் அவர்கள் இருவரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு பேக்கரி அருகில் ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் கட்டிட மேஸ்திரியான அருண் போதையில் இருந்து இருக்கிறார் அப்போது அவர் அருகில் இருந்த சக பயணியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அவர் மற்றொரு நபருடனும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் அவரது ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்கள் அவரிடமிருந்து 4000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் திருடி சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள ஊதியூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

2,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!! முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..!! எந்த நிறுவனம் தெரியுமா..?

Mon Feb 13 , 2023
சென்னையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்குமான ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் […]

You May Like