நீட் தேர்வு.. விண்ணப்பப் பதிவு இந்த தேதியில் இருந்து தொடங்கும்… விரைவில் அறிவிப்பு..

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்படும்.

நீட்

கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு செயல்முறை தொடங்கிய பிறகு, மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

என்னென்ன ஆவணங்கள் தேவை : நீட் தேர்வு எழுத விரும்புவோர், தங்களின் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நீட் தேர்வானது கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு: தகுதி, பாடத்திட்டம் : நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர்-தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை பாடங்களாகக் கொண்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

Maha

Next Post

சூடு பிடிக்கும் அதானி விவகாரம்...! நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்...!

Mon Feb 6 , 2023
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தவுள்ளது. ஆயுள் […]

You May Like