2022 நீட் தேர்வுக்கு இன்று Hall Ticket வெளியீடு…! ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில்,  இந்த காலக்கெடுவை மே 20-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டது.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது. இதற்கான தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் இளங்கலை 2022 ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது..?

  • முதலில் neet.nta.nic.in  என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அடுத்து முகப்புப் பக்கத்தில், NEET UG Admit Card இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அதில் பிறந்த தேதி உள்ளிட்ட உங்கள் உள்நுழைவு விவரங்களை பதிவு செய்யவும்.
  • பின்னர் உங்கள் NEET UG அனுமதி அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்து அச்சிடுங்கள்.

Also Read: இந்தியாவில் சமஸ்கிருத மொழியை கற்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்... மழை காரணமாக.. பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு...!

Mon Jul 11 , 2022
தெலங்கானாவில் கனமழை காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த […]

You May Like