விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ – மேக்ஸ். இந்த நியோ-மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு பணம் திருப்பி தருவதாகவும், மேலும் மாதம் 12-30 சதவீதம் வட்டி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் பல்வேறு நபர்கள் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பணத்தை முறையாக வழங்காமல் மோசடியில் ஈடுப்பட்டதால், முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த புகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களும் புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நியோ – மேக்ஸ் நிறுவணத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் அலுவலகம் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இப்புகாரின் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைசேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (55), பொன்மேனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலக்கரை வி.தியாகராஜன் (51), நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி (50), கோவில்பட்டி கே.நாராயணசாமி (63), அருப்புக்கோட்டை எஸ்.மணிவண்ணன் (55), சிவகங்கை குமாரப்பட்டி அசோக் மேத்தா பஞ்சய் (43), தேவகோட்டை ராம் நகர் எம்.சார்லஸ் (50), தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள் (80) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.
இந்நிலையில் நியோ-மேக்ஸ் நிறுத்தத்தில் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குனர்கலான் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சைமன் ராஜா மாற்று கபில் ஆகிய இருவரையும் பொருளாதார சிறைப்பட்டு பிரிவு போலீசார் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவர்களை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்.
இந்த நியோ-மேக்ஸ் நிறுவனத்தில் 40ஆயிரத்திற்கும் மேல் மக்கள் முதலீடு செய்து இருக்கிறார்கள், சுமார் 5000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.