#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

இந்தியாவிற்கு எதிராக ஆட்டம் போட்ட நேபாளம்..அடக்கி வைத்த நாடாளுமன்றம்

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது.

n1875506349853d8f945476c74df06d8ac1b6670ae457c19f7f75e315a932b30a01ba511e3

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் வலுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டி வந்த நேபாளம் திடீரென, கடந்த 1816 இல் ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து லிபுலேக் கணவாய் தங்களுக்கு சொந்தமென உரிமை கொண்டாட தொடங்கியுள்ளது.

அதேபோல் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட லிம்பியா துரா, கலபானி உள்ளிட்ட பகுதிகளையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மூன்று பகுதிகளையும் தனது எல்லைக்குள் அடங்கும் வகையில் நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு நேபாளத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. நேபாளத்தின் இந்த நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன், சீனாவின் தூண்டுதலின் பேரில்தான் நேபாளம் இப்படி நடந்து கொள்கிறது என விமர்சித்தது, ஆனால் இந்தியாவை திருப்பி தாக்கிய அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஓலி, இந்திய பகுதிகளான லிம்பியா துரா, கலபானி, லிபுலேக் பகுதிகளை என்ன ஆனாலும் நேபாளத்திற்குள் கொண்டு வருவோம் என தெரிவித்தார்.

n187550634c07659f0ba4b3319b6d0b01cf6c313fc482b9796eed5b1a6f38898e0e53a6107

இது இந்தியா-நேபாளத்திற்கு இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்தியாவை கடுமையாக விமர்சித்த அவர், சீனா வைரசை விட இந்தியா வைரஸ் மிகக் கொடியது என கூறியிருந்தார். இது இந்தியாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது, ஏற்கனவே எல்லையில் சீனா ,பாகிஸ்தானின் எதிர்ப்பை இந்தியா சமாளித்து வரும் நிலையில், நேபாளமும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியது இந்திய தலைவர்களை வியப்படைய வைத்தது. இந்நிலையில் அவசர அவசரமாக லிம்பியா துரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைபடம் மற்றும் அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இது பிரதமர் ஷர்மா ஓலியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

1newsnationuser4

Next Post

பறக்க தொடங்கிய உடனே இனப்பெருக்கத்திற்கு தயாராகும் வெட்டுக்கிளிகள்.. இவற்றை ஒழிக்க என்ன தான் வழி..?

Thu May 28 , 2020
பறக்க தொடங்கிய உடனே இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிராவின் விதர்பா, உத்தரபிரதேசத்தில் மதுரா மற்றும் புதிய டெல்லியில் பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா […]
பறக்க தொடங்கிய உடனே

You May Like