‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

“காவல்துறையினர் கொலை செய்தால் பணியிடமாற்றம் தான் தண்டனையா..?” ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 டிவிட்டரில்

தூத்துகுக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்தாகவும், அதனை தட்டிகேட்ட பெனிக்ஸுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, காவல்துறையினர் பெனிக்ஸை பல மணி நேரம் கட்டிவைத்து அடித்ததாகவும், அவரது ஆசனவாய் உள்ளே லத்தியால் குத்தி கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெனிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக பெனிக்ஸ் கூறியதை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அன்றிரவே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Police Encounter min

இதனையடுத்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெனிக்ஸின் தந்தை ஜெயராஜும் நேற்று காலை உயிரிழந்தார். சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் நடவடிக்கையை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் #சாத்தான்குளம் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

sathankulam n

இதுகுறித்து பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர் ” ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக, போலீஸ் கஸ்டடியில், காவல்துறையினரின் வெட்கக்கேடான வன்முறை காரணமாக தந்தை மகன் கொல்லப்பட்டுள்ளனர். சட்டத்தை அமல்படுத்த உங்களுக்கு உரிமை உள்ளது போல, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

“ காவல்துறையில் கஸ்டடியில் தந்தை, மகன் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். ஊரடங்கின் சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்தது தான் அவர்கள் செய்த குற்றம்” என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளர்.

“மனிதர்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல.. அவர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு யார் ஈடு செய்வது..? அவர்கள் குழந்தைகளை பற்றி நினைத்து பார்த்தீர்களா..? இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று தனது கோபத்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“யானைக்காக மட்டும் தான் பொங்குவோம்…. மனிதர்களுக்காக எல்லாம் பொங்கமாட்டோம்….
இப்படிக்கு நாம் மனிதர்கள்…. எவ்வளவு கேவலமான பிறவிகள் இல்ல நாம எல்லாம்???” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“தமிழகத்தின் பொள்ளா #ஆட்சியில் #பொள்ளாச்சியில் இருந்து #குமரி வரை குமரியை செல்போனில் படம் பிடித்த இவர்களை சாகும் வரை அடிக்க திராணி இல்லாதவர்கள், #சாத்தான்குளத்தில் செல்போன் விற்ற குடும்பத்தையே அடித்து சாகடித்துள்ளார்கள்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“யாருக்கான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது? “மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும் காலம் வந்துவிட்டதோ” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1newsnationuser1

Next Post

எங்க சப்போர்ட் இந்தியாவுக்கு - ரஷ்யா.. ஜர்க் ஆன சீனா

Wed Jun 24 , 2020
ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு சபையில், நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் வர வேண்டும் […]
images 95

You May Like