அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.?

“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..

ரஜினியின் அரசியல் வருகை குறித்து, 90களில் இருந்தே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. போருக்கு தயாராகுங்கள் என்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறினார். எனவே நிச்சயம் 2021 தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கட்சி தொடங்குவதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை..

ரஜினி

கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மக்களிடையே அரசியல் புரட்சி வெடிக்கட்டும் அப்போ அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டார். இதனிடையே கொரோனாவும் வந்து விட்டதால் அவரின் உடல்நிலை குறித்து கவலையால், மீண்டும் அவரது அரசியல் பிரவேசம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ரஜினி அண்மையில் கூறியிருந்தார்.

அந்த வகையில் நேற்று முன் தினம் அவர் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய, அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் அரசியல் தொடங்க உள்ளதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 31-ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் “வரபோகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி ம்தச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசயம்.. நிகழும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு தரப்பினர் இதனை விமர்சித்தும் பதிவிட்டும் வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர் ‘தலைவரே ஜனவரி சொன்னீங்களே…..
எந்த ஜனவரி சொல்லலையே” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் ஒருவர், “தலைவரின் பிபி / சர்க்கரை நோயாளிகள் போதும் யா பாடி தாங்காது” என்று கும்பிடுவது போல் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்திலேயே தேர்தலுக்கு 5 மாசம் முன்னாடி கட்சி துவங்கி சாதிச்சிடலாம்ன்னு நம்பிக்கிட்டு இருக்குற கோஷ்டி நம்ம கோஷ்டிதான்” என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார்.

IT ரெய்டு விடுவோம்னு சொன்னதும் எப்படி பல்டி அடிச்சான் பாரு” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

‘முப்பது வருஷமா இந்த இத்துப்போன ரீலைத்தானடா நீ ஓட்டிட்டு இருக்கே.. இனி நீ வயசுக்கு வந்தா என்ன.. வரலேனா என்ன..’ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் “அரசியலுக்கு வர முதலில் மக்களோடு மக்களாக வந்து நிக்கனும்,மக்கள்கிட்ட பேசனும் மேன். ஊடகங்களை தைரியமாக சந்திக்கனும்,அவங்க கேள்விக்கு பதில் சொல்லனும்,அதவிட்டுட்டு கேள்வி கேக்கும் போது ஓடி போய் Gate-அ சாத்திகிட்டா எப்படி மேன் உங்களுக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குவாங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களோட நியாயமான போராட்டங்கள் எதுலயுமே மக்கள் பக்கம் நிக்காம ஆளும் அரசுகளின் பக்கம் நின்னுகிட்டு மக்களை குறை சொல்ற நீங்க நேர்மையான நாணயமான வெளிப்படையான ஆட்சி குடுக்க போறிங்களா?? யோவ்…போயா காமெடி பண்ணாம” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதே போல பலரும் ரஜினியின் அரசியல் அறிவிப்பை விமர்சித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..!

Thu Dec 3 , 2020
20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை கடக்கும் புரவி புயலின் வழித்தடம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புரவி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், கடலில் ஏற்பட்டுள்ள உயர் வளிமண்டல அழுத்தம் காரணமாக புரேவி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை நோக்கி நகர்கிறது. அதன்பிறகு மன்னர் வளைகுடா பகுதியில் நுழைகிறது. அங்கு அரபி கடலில் ஏற்படும் அழுத்தத்தால் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகரும். பின்னர் […]
rain548 1606958763

You May Like