இதுவே சரியான நேரமா ? சவரனுக்கு 296 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை… 18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..!

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ எனப் பெயரிட்ட பெற்றோர்..

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயரிடப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் பிறந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

new born baby

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள குகுந்து கிராமத்தில் நேற்று முன் தினம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பவன் “ லாக் டவுன் (ஊரடங்கு) காலக்கட்டத்தில் எங்கள் மகன் பிறந்துள்ளார்.

லாக்டவுனை அமல்படுத்தியதற்கும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். லாக் டவுன் என்பது தேசிய நலனில் அக்கறை கொண்டது என்பதால் எங்கள் குழந்தைக்கு லாக்டவுன் என்று பெயர் சூட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சுயநலத்திற்கு முன்பாக தேசிய நலனே முக்கியம் என்பதை இந்த பெயர் நினைவூட்டும் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி தங்கள் குடும்பமும் லாக் டவுன் உத்தரவை பின்பற்றி வருவதாக கூறிய அவர், ஊரடங்கு முடியும் வரை தங்களை யாரும் பார்க்க வரவேண்டாம் என்று உறவினர்களிடம் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘கொரோனா’ என பெயர் சூட்டப்பட்டது அம்மாநிலத்தில் பேசுபொருளானது.

ஒற்றுமையின் சின்னமாகவும், தீமைகளை எதிர்த்து போராடும் நபராக இக்குழந்தை இருக்கும் என்று அக்குழந்தைக்கு கொரோனா என்று பெயரிட்ட மாமா தெரிவித்தார். கொரோனா, லாக்டவுன் என்ற வார்த்தைகளின் அர்த்தம் புரியாமலே தங்கள் குழந்தைகளுக்கு இந்த பெற்றொர்கள் பெயர் சூட்டியுள்ளனர் என்பதே வேடிக்கையான உண்மை.

1newsnationuser1

Next Post

“உங்களுக்கு உதவுவதற்காகவே என் தந்தை என்னிடம் இருந்து தள்ளி இருக்கிறார்.. வீட்டிலேயே இருங்கள்..” பல இதயங்களை வென்ற சிறுமி..

Wed Apr 1 , 2020
21 நாள் ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று 9 வயது சிறுமி வலியுறுத்தியுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொரோனா பீதியில் உள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. […]
arunachal pradesh girl

You May Like