ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

மாஸ்க்கில் இருந்து விடுதலை.. கொரோனாவை செயலிழக்க செய்ய வந்துவிட்டது புதிய கருவி..! அதுவும் மலிவு விலையில்..

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் ஒப்புதலுடன் கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் கருவி ஒன்றை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

123 2

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நமது இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள இந்த சூழலில் இதற்கான மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுவாக மக்கள் கூட்டம் கூடுவதால் நோய் பரவும் என்ற காரணத்தால் தற்போது அனைத்து பொது சேவைகளும் முடங்கியுள்ளது. மேலும் அனைவருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆட்கள் தேவைப்படும் இடங்களில் குறைந்த அளவிலானோர் பணியில் அமர்த்தப்படுள்ளனர்.

நம்முடைய இயல்பு வாழ்க்கை முடங்கிய இந்த சூழலை சமாளித்து பொது இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பெங்களூரை சேர்ந்த டி ஸ்கெலென் நிறுவனம் ஒரு கருவியை கண்டுப்பிடித்துள்ளது. சிறிய ட்ரம் வடிவில் உள்ள ‘ஷைகோகேன்’ எனப்படும் அந்த கருவியை தயாரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயிரம் சதுர அடி பரப்பு வரை இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதால் ஓட்டல், மால், விமான நிலையங்கள் போன்ற பொது மக்கள் புழங்கும் இடங்களில் வைக்கலாம். இந்த கருவி காற்றில் பரவியுள்ள கொரோனா வைரஸின் எஸ்-ப்ரோட்டீன் அல்லது ஸ்பைக் ப்ரோட்டீன் ஆற்றலை குறைந்து வைரஸை செயலிழக்க செய்வதால் அடுத்து அந்த வைரஸ் மனித உடலில் புகுந்தாலும் பாதிப்பு இல்லை. இந்த கருவி மூலம் 99.9 சதவீதம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து டி ஸ்கெலென் நிறுவனத்தலைவர் டாக்டர் விஜயகுமார் கூறியுள்ளதாவது,” இந்த கருவியை கொண்டு 26 இடங்களில் சோதனைகள் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. கொரோனா வைரஸின் அடிப்படையான எஸ்-ப்ரோட்டீனை இந்த கருவி அழிப்பதால் இது மாபெரும் வெற்றி பெரும். இதன் விலை ஒரு ஸ்மாட் போன் விலையை விட குறைவு என்பதால் நடுத்தர மக்களும் இதனை வாங்கி பயன்பெற முடியும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவங்கள் சில இந்த கருவியை தாயாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். இந்த கருவியை வருகின்ற ஆகஸ்ட் 15 நள்ளிரவில் அறிமுகம் செய்யவுள்ளோம்” என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் தான் புற்றுநோய் சிகிச்சையில் உதவும் சைடோடிரான் கருவியை கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை..?

Thu Jul 30 , 2020
ஊராட்சி பகுதிகளில் சிறிய கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வரும் ஆகஸ்ட் 31 வரை தமிழக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஜூலை மாதத்தை போல ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு […]
கோவில்களில்

You May Like