இனி அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணிக்கு கட்டாயம் திறக்க வேண்டும்… அரசு அதிரடி…!

மாநிலம் முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் இந்த நியாய விலை கடை மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரிசி அட்டை, சர்க்கரை ஆட்டை என்று சுமார் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்த சுற்றறிக்கையில் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்படும் வேஷ்டி, சேலைகள் பி ஓ எஸ் இயந்திரத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் இருப்பு வைத்துக்கொண்டு வினியோகம் செய்யாமல் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல அனைத்து தினங்களிலும் சரியாக காலை 9 மணி அளவில் நியாய விலை கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அப்படி சரியான நேரத்திற்கு செயல்படாத நியாய விலை கடைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும் என்றும், ஒரே நபர் வெளி மாநிலத்திலும், தமிழகத்திலும் குடும்ப அட்டை வைத்து பொருட்கள் வாங்கி வருவது தொடர்பாக கள விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல இந்திய குடிமகனாக இல்லாத யாருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Next Post

தமிழக மக்களே இதற்கு இன்றே கடைசி நாள்…..! உடனே முந்துங்கள்…..!

Wed Feb 15 , 2023
வீடு விசைத்தறி கைத்தறி குடிசை மற்றும் விவசாய நகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் சென்ற வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்த நிலையில், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மின் இணைப்பு என்னையும் ஆதார் கார்டு எண்ணையும் பலர் இணைக்காத நிலையில் கால அவகாசம் ஜனவரி […]

You May Like