ஜூலை 6 முதல் சென்னைக்கு புதிய தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, நோய்த்தொற்று அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது. 06.7.2020 திங்கள் முதல் சென்னையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விதிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தேநீர் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை திறக்க அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் பார்சல் உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம். ஆன்லைனில் இரவு 9 மணி வரை மட்டுமே உணவுகளை ஆர்டர் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர்களுக்கு ஐடி கார்டுகள் வழங்கப்பட வேண்டும். வணிக வளாகங்கள் தவிரத்து அனைத்து ஷோரூம்கள், கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.