உஷார்…. ரூ.10,000 வரை அபராதம்…! இன்று முதல் புதிய விதி அமல்…; இதை மட்டும் செய்யக்கூடாது…!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும்.

இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மதுகுடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆனால், ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி, இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

Vignesh

Next Post

உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு...!

Wed Oct 26 , 2022
உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஆலோசனை மேலும் கூறியது. இது குறித்து […]

You May Like