இந்த சக்கர நாற்காலியை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ளலாம்..!! சென்னை நிறுவனம் அசத்தல்.. வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ? இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை தொடரும்..? வானிலை மையம் வெளியிட்ட தகவல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள்

பாத்து பேசுங்க அமைச்சரே..விஜயபாஸ்கருக்கு செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம்

மூத்த செய்தி வாசிப்பாளரை மிரட்டும் தொனியில் பேசியதாக, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

download 18

பிரபல செய்தி வாசிப்பாளாரும், நடிகரும் ஆன வரதராஜன் வெளியிட்டு இருந்த வீடியோவில், நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொரானா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தன.

அவருக்கு எப்படி கொரானா வந்தது என்றே தெரியவில்லை, காரணம் அவர் மிகவும் டிஸிபிலிண்டானவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள் என தெரிவித்து இருந்தார்.

இந்த விடியோ வைரலான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம். எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும்.

corona virus

செய்தியாளர் வரதராஜன் மீது தவறான தகவல் பரப்பியதாக நடவடிக்கை எடுக்கப்படும். கொரானா பரவும் காலத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டுள்ளார். அவர் எந்த அரசு செயலரை தொடர்புகொண்டார் எனத் தெரிவிக்க வேண்டும். பெருந்தொற்று நோய் தொற்று சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடி செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரும், மிகச் சிறந்த நாடக கலைஞரும், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவருமான வரதராஜன் கொரானா பாதிப்பு குறித்து தனது சொந்த அனுபவத்தை வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். அதில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ பதிவு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும், வெளியே சென்று தொற்று ஏற்பட்டால் சிகிச்சை பெறுவது சிரமம் ஆகிவிடும் என்ற எண்ணம் மட்டுமே ஏற்படும்.

ஆனால், அந்த வீடியோ தவறானது என்றும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை என்று செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கருதுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் நற்பெயருடன் விளங்கி வரும் வரதராஜன் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ.வின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்..

Mon Jun 8 , 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகனின் ல் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் கடந்த வாரம் முதல், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் வசதி கொண்டு சுவாசித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று […]
திமுக எம்.எல்.ஏ

You May Like