அடுத்த அதிர்ச்சி..!! பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்த ஜூம் நிறுவனம்..!! எத்தனை பணியாளர்கள் தெரியுமா..?

ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் 1,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பிரபல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஜூம் நிறுவனமும் இந்த பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதால், ஜூம் நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் பணிபுரியும் 1,300 பணியாளர்கள் பணிநீக்கம் செய்ய முன்வந்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் பணியாளர்களில் கிட்டத்தட்ட 15% பேரை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான், 98% ஊதியக் குறைப்பை கையிலெடுப்பதாகவும், வரும் நிதியாண்டிற்கான தனது போனஸை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2023இல் பணிநீக்கம் செய்த முக்கிய நிறுவனங்கள்:

கூகுள்: தேடுபொறி ஜாம்பவான் கூகுள் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

அமேசான்: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சுமார் 18,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

மைக்ரோசாப்ட்: மென்பொருள் நிறுவனம் சுமார் 10,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

காயின்மேஸ்: கிரிப்டோகிரணசி வர்த்தக தளமானது சுமார் 950 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

சேல்ஸ்ஃபோர்ஸ்: சுமார் 8,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

ஸ்பாட்டிபை: இசை ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான ஸ்பாட்டிபை 400 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

ஏஸ்ஏபி: ஐரோப்பாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான SAP, உலகளவில் 3,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

பேபால்: டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேபால் சுமார் 2,000 முழுநேர பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

Chella

Next Post

SBI வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Wed Feb 8 , 2023
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் […]

You May Like