வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

நிறைவேறாமல் போன நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் இறுதி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கிலிடப்பட்டனர்.

202001190135196185 Supreme Court to hear Nirbhaya murder case tomorrow SECVPF.gif


டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து ‌6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். கைதானவர்களில் ஒருவர் சிறார் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த வழக்கில் பலகட்ட விசாரணைக்கு பின் குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் கருணை மனு, அது தள்ளுபடி செய்யப்பட்டால் அதை எதிர்த்து சீராய்வு மனு என ஒருவர் பின் ஒருவராக அளித்து தூக்கை தள்ளிப்போட்டு வந்தனர். இதனால், அவர்களின் தூக்கு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதையத்து இறுதியாக அவர்களுக்கு இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

nirbaya case

இதனிடையே, அக்சய் மற்றும் பவன் ஆகியோர் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்த இரண்டாவது கருணை மனு நிலுவையில் இருப்பதால் தங்களுடைய தூக்கு தண்டணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நேற்று மாலை 3.30 மணி அளவில் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை இரவு 10.15 மணி அளவில் நீதிபதி மன்மோகன் வீட்டில் இரு நீதிபதிகள் (நீதிபதி மன்மோகன் & நீதிபதி சஞ்சய் நாருல்லா) அமர்வு விசாரித்தது. கொரோனா காரணமாக போதுமான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. மனித உரிமை ஆணையத்திலும், பீகார் நீதிமன்றத்திலும் குற்றவாளிகள் தொடர்பான பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளன எனவே தூக்கு தண்டணையை ஒத்திவைக்க வேண்டும் என்று குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் வாதிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன, தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. புதியதாக கூறுவதற்கு ஏதாவது இருந்தால் கூறுங்கள். உச்சநீதிமன்றம் வரை உங்கள் மனுக்கள் அனைத்தும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் கடவுளிடம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது தங்களால் தடை ஏதும் விதிக்க முடியாது. தேவையில்லாமல் நேரத்தை வீண்டிக்காதீர்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை எதிர்த்து உடனே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அதிகாலை 2. 45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தூக்கு தண்டனையை தள்ளி வைக்க வாதிட்டார். அவர் கூறிய எதையும் ஏற்காத நீதிபதிகள் வழக்கு சரியான பாதையில் நியாயமாக நடந்தது. அதனால், தூக்கு ஒத்தி வைப்புக்கு இடம் இல்லை என மறுத்து விட்டனர். இதையடுத்து, குற்றவாளிகளீன் கடைசி ஆசையாக அவரகள் குடும்பத்தை சந்திக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதை நீங்கள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் தான் கேட்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததோடு கடைசி நேரத்தில் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க முடியாது. இது திகார் சிறை விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து விட்டார். இதையடுத்து, அவர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தூக்குக்கு முன்பாக டீ மற்றும் தண்ணீர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக அவர்கள் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற இறுதி ஆசையும் நிறைவேற்றப்படாமல் தூக்கில் இடப்பட்டனர்.

1newsnationuser4

Next Post

மனைவியை கொன்று கணவர் தலைமறைவு...டிக்-டாக்-ஆல் பறிபோன உயிர்...

Fri Mar 20 , 2020
திருபரங்குன்றத்தில், டிக்-டாக்-ல் ஆண் நண்பருடன் பழக்கம் இருக்குமோ என சந்தேகித்து மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்தவர் அசோக் (32) இவரது மனைவி சுதா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். இவரது மனைவி சுதா டிக்-டாக் வீடியோ செய்து தனது பொழுதை கழித்து வருவது வழக்கம். இதனால் […]
madurai tiktok murder issue

You May Like