உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றம்..!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

545005

தலைநகர் டெல்லியில், 2012 டிசம்பர் 16ம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த நிர்பயாவுக்கு நடந்தது போன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது என அனைத்து மக்களும் பேசும் அளவுக்கு ஒரு கொடுரமான சம்பவத்தை 6 பேர் கொண்ட கும்பல் நிகழ்த்தியது. ஆம், ஓடும் பேருந்தில் இருந்து முதலில் நிர்பயாவின் ஆண் நண்பர் தூக்கி வீசப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, நிர்பயா அந்த காம அரக்கர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதோடு விட்டார்களா அந்த பிசாசுகள், நிரபயாவின் பிறப்புறுப்பை இரும்பு ராடால் சிதைத்து ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசினர். இதையடுத்து  அவரை சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 1‌3 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

Tamil News large 2425618

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து ‌6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டு‌‌கள் தண்டனைக்குப்பின், அந்த 16 வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு நிர்பயாவின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதி தன்னை கைவிட்டு விட்டதாகவும், தன் மகளை இரும்பு ராடால் மிகவும் கொடுரமாக தாக்கியதே இவன்தான் எனவும் இவனை விடுதலை செய்தால் இன்னும் நாட்டில் பல பெண்கள் பாதிக்கப்படுவார்கள்; அவனை வெளிவிடும் பட்சத்தில் அவனது முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.


பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ், எஞ்சிய நால்வர் வைத்து நிர்பயா வழக்கு நகர்ந்தது.‌ பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணைக்குப்பின், 2013 செப்டம்பரில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியது டெல்லி கீழமை நீதிமன்றம். அதனை ஏற்காத குற்றவாளிகள், தண்டனையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து அதிர்ச்சியளித்தனர்.

202001190135196185 Supreme Court to hear Nirbhaya murder case tomorrow SECVPF.gif

அதன்பின் உச்சநீதிமன்றத்தை நாடிய நால்வரும் அங்கும் மேல்முறையீடு செய்தனர். ஆனால், குற்றவாளிகளை கைவிட்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனு மட்டுமல்லாமல், அதன்பின் தாக்கல் செய்யப்பட்ட‌ சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து அவர்கள் ஒருவர் பின் ஒருவராக கருணை மனு அளித்து வந்தனர். அதை அனைத்தையும் குடியரசுத்தலைவர் நிராகரித்து வந்தார். இவர்கள் அனைவரும் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி தப்பிக்க அவர்களின் வக்கீல் ஏ.பி.சிங் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து குடியரசு தலைவர் கருணை மனு நிராகரித்தால், அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு என தூக்கை தாமதப்படுத்தி வந்தனர்.
இதனால், இவர்களின் தூக்கு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

545042

இதனிடையே “7 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறேன். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள். தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை கோர்ட் ஏன் புரிந்துகொள்வதில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன்” என்று கூறி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கோர்ட்டில் கதறி அழுதார்.

இறுதியாக இவர்களின் வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று காலை நால்வரு‌க்குமான தூக்கு தண்டனை‌யை உறுதி செய்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.

1newsnationuser4

Next Post

கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது.. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய இத்தாலி..

Fri Mar 20 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,45,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 88,437 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,048-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் […]
italy corona

You May Like