சமீபத்தில் மும்பையை தாக்கிய நிசார்கா புயலில் சிக்கிய ஒருவர் காற்றில் தூக்கி வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் அரபிக்கடலில் உருவான நிசார்கா புயலால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் காற்று, கனமழை பெய்ததது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பாதுகாப்பு பேரிடர் தாயர் நிலையில் வைக்கப்பட்டு பாதிப்பு கட்டுக்குள் வைக்கபட்டிருந்தது. எதிர்பார்த்த அளவு உயர் சேதம் ஏற்ப்படவில்லை.
இந்த நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு இரும்பு கூடாரத்தில் ஒதுங்கி நின்ற நபர் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்படுகிறார். இதில் அவர் அதிஷ்டவசமாக ஒரு கயிற்றை பிடித்துக்கொண்டு காற்றின் வேகம் குறைந்தவுடன் உயர் தப்பியுள்ளார்.