”நித்தியானந்தாவின் கைலாசா நாடு எங்கு இருக்குன்னு தெரிஞ்சிருச்சு”..!! இனி ரெய்டு தான்..!! வெளியான புதிய தகவல்..!!

உள்ளூரில் பேமசாக இருந்த நித்தியானந்தா, இப்போது உலக பேமசாகிவிட்டார். உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர். இவர் நடிகை ஒருவருடன் இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு, நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் இருக்கும் நிலையில், தற்போது தேடப்படும் குற்றவாளியாக அவர் இருக்கிறார். இந்நிலையில், நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவில் வசித்து வருவதோடு சில பெண்களையும் அங்கு வைத்திருக்கிறார்.

இதற்கிடையே, கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பசிபிக் பெருங்கடலில் உள்ள கோஸ்டா ரிகா தீவுகளில் ஒன்றுதான் கைலாசா தீவு என்று சொல்லப்படுகிறது. நித்தியானந்தா பல நாடுகளில் சில கோவில்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த கோவில்கள் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இன்னும் பல நகரங்களில் தன்னுடைய ஆசிரமங்களை திறப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைலாசவில் வசிக்கும் தன்னுடைய குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் கைலாசவுக்கு வரும் பக்தர்களை வரவேற்பதற்காக கதவுகள் எந்நேரமும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்களின் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதற்கு நித்தியானந்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்…..! திமுகவின் 10 பணிமனைகளுக்கு சீல் வைத்த தேர்தல் ஆணையத்தால் பரபரப்பு……!

Thu Feb 16 , 2023
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுகவின் 21 மாத கால ஆட்சியை பொறுப்புக்கு மதிப்பெண் வழங்கும் தகுதி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக முயற்சித்து வருகிறது.அதேபோல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என நிரூபிப்பதற்கு […]

You May Like