
சென்னை: கொரானாவின் தாக்கம் வீரியமாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனினை கருத்தில் கொண்டு இந்தாண்டு என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடிவருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு பொதுமக்களின் நலன்கருதி எந்த ஒரு கொண்டாட்டாங்கள், நலத்திட்டங்கள் மற்றும் செய்திதாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒன்றிய,தொகுதி,நகரம்,பகுதி மற்றும் வார்டு இளைஞரணி மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தளபதி அவர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக ரசிகர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்களை தெரிவித்துவருகிறார்.