வேலையும் இல்ல, கல்யாணமும் ஆகல, இனிமே வாழரதுல எந்த பிரயோஜனமும் இல்ல விரக்தியில் பெண் தற்கொலை…!

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூர் பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. 30 மாடிகளை கொண்ட அபார்ட்மெண்ட் குடியிருப்பில் 24 வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் அவரது மகள் ஜெனிபரும்(35) வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளராக ஜெனிபர் பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்து வந்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் ஜெனிபரின் வேலை பறிபோனது. இதன் பிறகு பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை தேடியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் ஜெனிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு வேலை போனது, மற்றும் திருமணமாகாமல் வீட்டிலிருந்தது போன்ற காரணங்களால், ஜெனிபர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் 24 வது மாடியில் இருந்து ஜெனிபர் கீழே குதித்துள்ளார். சத்தம் கேட்டு காவலாளி ஓடிச்சென்று பார்த்தபோது ஜெனிபர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன் அப்பார்ட்மெண்ட்டில் உள்ளவர்களிடம் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

கொரோனா பரவல் அதிகரிப்பு..! ஆன்லைனில் நடக்கும் அதிமுக பொதுக்குழு..?

Sun Jul 3 , 2022
கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இது […]
கொரோனா பரவல் அதிகரிப்பு..! ஆன்லைனில் நடக்கும் அதிமுக பொதுக்குழு..?

You May Like