அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..! இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

போலீசாருக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பால் முகவர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..

இனி போலீசார் வீடுகளுக்கு பால் சப்ளை கிடையாது என்று பால் முகவர்கள் சங்கம் அவசர முடிவு எடுத்துள்ளது.

 போலீசார்

சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பல்வேறு வணிக அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி பேசிய போது “ கொரோனா ஊரடங்கில் பல்வேறு இன்னல்களை பொருட்படுத்தாமல், பால் முகவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர்.

ஆனாலும், எங்களை காவல்துறையினர் மோசமாக நடத்துகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விற்பனைக்கு தடை இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் பல மாவட்டங்களில் பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் தடுப்பது, வாகனங்களை தடுப்பது என பல இன்னல்களை போலீசார் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரிடம் புகார் அளித்தும் எந்த தீர்வும் கிடைக்கவிலை. எனவே நாளை முதல் காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்று அவசர முடிவு எடுத்துள்ளோம். எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை கீழ்நிலை முதல் உயரதிகாரிகள் வரை அனைத்து காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு... ஆர்டிஐ மூலம் வெளிவந்த உண்மை...

Sat Jun 27 , 2020
கீரப்பாளையம் ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிக வாக்கு பெற்ற திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததாக கூறி அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்த்தத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 டிசம்பர் 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்றாக கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கும் மூன்றாவது வார்ட் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் சிதம்பரம் […]
dmk1

You May Like