உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

இனி இல்லை காற்று மாசு; அறிமுகமானது பசுமை பட்டாசு

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்துவைத்தார்.

Green Crackers Harsha Vardhan 2019 10 05 1

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு மற்றும் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்தனர்.

இதையடுத்து, தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வகுத்தது. சாதாரண பட்டாசுகளில் மூலப் பொருட்களின் ஒன்றாக பேரியம் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகமாகி இருக்கும்.

அதற்கு பதிலாக மெக்னீசியம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இதனால் பட்டாசு வெடிக்கும் போது காற்று மாசு 30 சதவீதம் வரை குறையும். இப்படி தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மீது பசுமைப் பட்டாசுகள் என்பதற்கான குறியீடு இருக்கும்.

download 2 3

பசுமைப் பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.இந்த பட்டாசுகளின் கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.

பசுமைப் பட்டாசுகளை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய அவர், மாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,வழக்கமான பட்டாசுகளைவிட 30 சதவீதம் குறைவான புகையை வெளியிடும் என்றும் குறிப்பிட்டார்.

பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பதற்கு 230 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு விற்பனைக்கு வரவுள்ள இந்தவகை பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என ஹர்ஷ்வர்தன் மேலும் தெரிவித்தார்.

பசுமைப் பட்டாசுகளில் இடம்பெற்றுள்ள இடுபொருட்கள் காரணமாக அவற்றின் விலை குறைவாகவே இருக்கும் என்று நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

மதுரையில் பயங்கரம் - நள்ளிரவில் வடமாநில இளைஞர் ஓட, ஓட வெட்டிக்கொலை

Sun Oct 6 , 2019
மதுரையில் வட மாநில இளைஞர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனியில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள படிக்கட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல், இளைஞரை ஓட, ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]
பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு..! இளைஞரை கொல்ல முயன்ற இருவர் கைது..!

You May Like