இனி கயிறு கட்டக்கூடாது.. டாட்டூ குத்தக்கூடாது.. பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூகப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது..

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அந்த வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த உத்தரவில், ”பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது
  • எண்ணெய் தேய்த்து தலைவார வேண்டும்
  • டாட்டூ குத்தக்கூடாது
  • காலணி அணிந்து வர வேண்டும்
  • கம்மல், செயின், காப்பு போன்றவற்றை மாணவர்கள் அணியக் கூடாது
  • பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும்
  • பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும்
  • பெற்றோரின் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரின் அனுமதி பெற்று விடுப்பு எடுக்க வேண்டும்..
  • மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது இருசக்கர வாகனம், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது.
  • மாணவர்கள் அடிக்கடி கை கால்களை கழுவ வேண்டும்
  • பள்ளிக்கு சீருடையில் வரும் போது, கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
  • வகுப்பில் ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும்
  • மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையில் தான் செல்ல வேண்டும்
  • கை, கால், நகங்களை சுத்தமாக வெட்டி, தலைமுடியையும் சரியாக வெட்ட வேண்டும்..
  • மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது.
  • மாணவர்கள் டக் இன் செய்யும் போது, சீருடை வெளியே வராத வகையில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவர்களிடையே பிரச்சனை ஏற்படுட்டு வருகிறது. சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Maha

Next Post

எல்லாம்.. சரி.. கடைசியில அதை மாத்த மறந்துட்டாரே... ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்..

Fri Jul 15 , 2022
பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட […]

You May Like