விமான நிலையத்திற்கு வரும் மக்கள், விமான டிக்கெட்டையே இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம் என சென்னை விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக நான்கு மாவட்டங்களிலும் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் அவசியம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம் ரயில் மற்றும் விமான பயணங்களுக்கு எந்த தடையும் இன்றி இயங்க உள்ளது. அவ்வாறு விமானங்களில் பயணம் செயபவர்களும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்திற்கு முழு ஊரடங்கின்போது வந்து செல்லும் பயணிகளின் வாகனங்கள் விமான டிக்கெட்,போா்டிங் பாஸ்களை காட்டிவிட்டு பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அதற்காக மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்று சென்னை விமானநிலையம் அறிவித்துள்ளது.