’யாரும் இதை செய்யக்கூடாது’..!! ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்..!!

ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

’யாரும் இதை செய்யக்கூடாது’..!! ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்..!!

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ”ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன் பிறகுதான் சேவைக்கு வரவேண்டும். வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே சேவைக்கு செலவிட வேண்டும். ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது” என்று நடிகர் விஜய் கூறியதாக அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

பள்ளி வளாகத்தில் ஆபாச நடனம்.. வைரலாகும் மாணவிகளின் வீடீயோ.!

Tue Nov 8 , 2022
சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ அல்லது புகைப்படம் கசிந்தால் அது நெட்டிசன்களுக்கு பிடித்து விட்டால் பட்டி தொட்டி எங்கும் அதை பிரபலமாக்கி விடுவார்கள். அதுபோல சாதாரண மனிதர்கள் கூட திடீர் செலிப்ரட்டி ஆகிவிடுவது வழக்கம். சினிமாவில் தான் ஒரே நாளில் பணக்காரனாகவும், பிரபலமாகுவதும் காண்பிக்கப்படும். ஆனால் இந்த சமூக வலைதளங்களில் மூலமாக அது சாத்தியப்படுகிறது. எங்கோ மூளையில் கடந்த ஜிபி முத்து போன்றவர்கள் இதற்கு ஒரு உதாரணம். அதுபோல […]

You May Like