வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்குகின்றது!!!

தமிழகம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் இன்றும் , நாளையும் , தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28.10.2022 தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29ம் தேதி தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகபட்டினம் , மயிலாடுதுறை , புதுக்கோட்டை , திருச்சிராப்பள்ளி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும். பெரம்பலூர் , சிவகங்கை , விருதுநகர் , மதுரை, தேனி , தென்காசி , திண்டுக்கல் , ராமநாதபுரம் , தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30ம் தேதி தமிழ்நாடு , புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடு துறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையோ, மிகக் கனமழையோ பெய்யும் செங்கல்பட்டு , காஞ்சிபுரம், விழுப்புரம் , கடலூர் , கள்ளகுறிச்சி பெரம்பலலூர் , அரியலூர் , திருச்சி , கரூர் புதுக்கோட்டை , சிவகங்கை ராமநாதபுரம் , விருதுநகர்,, சிவகங்கை போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யலாம்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளிவில் இருகு்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லோசான அல்லது மிதமான மழை பெய்யும்.

Next Post

’என் மகளையும் கொடுத்து வீட்லயும் இடம் கொடுத்தா இப்படிதான் பண்ணுவியா’..? மருமகனை மர்டர் செய்த மாமனார்..!!

Wed Oct 26 , 2022
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மருமகனை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, மாடியிலிருந்து கீழே விழுந்ததாக மாமனார் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவையை அடுத்துள்ள வளவன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சந்தியாவுக்கும், தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த நாகபாண்டி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் நாகபாண்டி மாமனார் வீட்டிலேயே தங்கி அப்பகுதியில் கட்டட […]

You May Like