உஹான் இல்ல.. அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்தது.. அமெரிக்க நிபுணர் தகவல்…

கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார்.

கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது ஆய்வகத்திலிருந்து கசிந்தது மற்றொரு தரப்பும் வாதிடுகின்றனர்.

கடந்த மாதம், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கோவிட் ஆய்வக கசிவு கோட்பாட்டிற்கு “மேலும் விசாரணை” தேவை என்று கூறினார். ஆனால் பின்னர் அவர் ஒரு மூத்த ஐரோப்பிய அரசியல்வாதியிடம் இந்த தொற்றுநோய் சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து தோன்றியது என்று கூறியதாக தகவல் வெளியானது..

இந்நிலையில் கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து இரண்டு வருட ஆய்வுக்கு தலைமை தாங்கிய பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், கொரோனா வைரஸ் அமெரிக்கா ஆய்வகத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.. டைம் இதழின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இருமுறை பெயரிடப்பட்டுள்ளார்.. கொரோனாவின் தோற்றம் குறித்து 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்ட அவர், கொரோனா வைரஸ் ‘அமெரிக்க ஆய்வக உயிரி தொழில்நுட்பத்தின்’ விளைவு என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து மேலும் பேசிய அவர் “நான் கோவிட் தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக லான்செட்டுக்கான கமிஷனுக்குத் தலைமை தாங்கினேன். இது அமெரிக்க ஆய்வக உயிரித் தொழில்நுட்பத்திலிருந்து வெளிவந்தது.. இரண்டு வருட தீவிரப் பணிகளுக்குப் பிறகு இதை குறிப்பிடுகிறேன்.. எனவே இது இயற்கையான கசிவு அல்ல.

எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது.. எனினும் இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன… கோவிட் அமெரிக்காவில் தோன்றியதா அல்லது வுஹானில் உள்ள அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பால் உருவானதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை..” என்று தெரிவித்தார்.. இதனிடையே சாக்ஸின் கூற்று “முழுமையான விசாரணைக்கு” உத்தரவாதம் அளிக்கிறது என்று சீன அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்..

Maha

Next Post

SBI வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை...! உடனே விண்ணப்பிக்கவும்....

Wed Jul 6 , 2022
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager பணிகளுக்கு என மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Commerce பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 2 ஆண்டுகள் தேவை. தேர்வு செய்யப்படும் […]

You May Like